விஜய் சேதுபதி – டாப்ஸி நடிக்கும் படத்தில் இணையும் யோகிபாபு.!

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் படத்தில் யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி . அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார்.தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் டாப்ஸி அடுத்ததாக காமெடி படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார்.
இதனை புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகரான ஆர். சுந்தர்ராஜனின் மகனான தீபா சுந்தர்ராஜன் இயக்க ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் பண்டைய அரசரராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜகபதி பாபு அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முதல் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025