தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸி நடிக்கும் படத்தில் ராதிகா சரத்குமார் புதிதாக இணைந்துள்ளார் .
2017ல் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி . அதனையடுத்து அஜித்தின் ஆரம்பம் உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பல படங்களில் நடித்து பிரபல பாலிவுட் நடிகையாக உள்ளார்.தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கேம் ஓவர்’ என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கும் டாப்ஸி அடுத்ததாக காமெடி படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார்.
இதனை புகழ்பெற்ற இயக்குநர் மற்றும் நடிகரான ஆர். சுந்தர்ராஜனின் மகனான தீபா சுந்தர்ராஜன் இயக்க ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டாப்ஸி நடிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் பண்டைய அரசரராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜகபதி பாபு மற்றும் யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இந்த படத்தில் புதிதாக ராதிகா சரத்குமார் அவர்களுடன் இணைந்துள்ளார். டாப்ஸியுடன் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து டெவில்ஸ் அட் ஒர்க் என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…