நடிகர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.
சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமாகி ,தற்போது இயக்குனராகவும் ,நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் பிரபுதேவா.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர் தற்போது யங் மங் ஜங், ஊமை விழிகள், பாஹீரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருவதுடன் சல்மான் கானை வைத்து ராதே எனும் படத்தினை இயக்கி அது ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தமிழ் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இவரது அடுத்த படத்தினை ராகவன் இயக்குகிறார்.இவர் மஞ்சப்பை மற்றும் கடம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கவுள்ளார்.இவர் விஜய் சேதுபதியுடன் பீட்சா , சேதுபதி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.டி.இமான் இசையமைக்க, செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய உள்ள இந்த படத்தின் பூஜையானது சென்னையில் நேற்று நடைபெற்றுள்ளது.இதில் ரம்யா நம்பீசன், பிரபுதேவா, ராகவன்,டி.இமான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…