இன்று ரிலீசாகிறது விஜய் சேதுபதி நடிப்பில் உருவான ‘முகிழ்’ திரைப்படம்…!
விஜய் சேதுபதி நடித்துள்ள ‘முகிழ்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுவாமிநாதன் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் மகள் ஸ்ரீஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘முகிழ்’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தை விஜய் சேதுபதியே தயாரித்து உள்ள நிலையில், விஜய் சேதுபதி புரொடெக்சன் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு சத்யா பொன்மர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், இசையமைப்பாளர் ரேவா இசை அமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் டீசர் வெளியான நிலையில், விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படம் இன்று திரையரங்கில் வெளியாக உள்ளது.