இந்தியன்-2வில் நடிக்க வந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்! – வருத்தப்பட்ட விஜய் சேதுபதி!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் இந்தியன்-2. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், காஜல், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானிஷங்கர், என பலர் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் உலகநாயகன் பாராட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்தனர். அதில் பேசிய, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, மக்கள் நீதி மையம் கட்சி பெயர் எனக்கு பிடித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் சில படங்கள் நடிக்க தேதி ஒதுக்கியதால்,உலகநாயகனுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுடேன்.
சூப்பர் ஸ்டாருடன் இணைத்து நடித்து விட்டேன். விரைவில் உங்கள் படத்தில் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன். அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுங்கள் சார் என அன்பு கோரிக்கை வைத்து விட்டு தனது பேச்சை முடித்துக்கொண்டார். விஜய் சேதுபதி.