காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்“. படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது. இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த வார இறுதிக்குள் முழு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், படத்தில் தனக்கான படப்பிடிப்பை நடிகை சமந்தா முடித்துள்ளார். தனது காட்சிகளை முடித்த கொண்டாட்டதில் நடிகை சமந்தா நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதைபோல் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், நயன்தாரா – சமந்தா வுடன் பஸ்சில் விஜய் சேதுபதி பயணம் செய்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. கமல் ஹாசன் நடித்த சத்யா படத்தில் இடம் பெற்ற வலையோசை பாட்டில் இதைபோல் காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…