800 படத்தில் இருந்து விலக நடிகர் விஜய் சேதுபதிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், மக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ட்விட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹஷ்டாக்கை ட்ரண்ட் செய்து வந்தனர்.
எதிர்ப்புகள் அதிகளவில் கிளம்பிய நிலையில், விஜய்சேதுபதியின் கலை பயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடை ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர் இத்திரைப்படத்திலிருந்து விலக வேண்டுமென முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…
சென்னை : நாதகவில் இருந்து சமீபத்தில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குற்றச்சாட்டுகளை…
சென்னை : தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, …