“தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை விரும்பவில்லை”- 800 படத்தில் இருந்து விலக முரளிதரன் வேண்டுகோள்!

800 படத்தில் இருந்து விலக நடிகர் விஜய் சேதுபதிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்ததுள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடிக்கவுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறையாக முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், இந்த படத்திற்கு “800” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளதாகவும், தார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ராணா தயாரிக்கவுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, இலங்கை, இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நான்கு நாடுகளில் படப்பிடிப்புகள் நடக்கவுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், மக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ட்விட்டரில் #ShameOnVijaySethupathi என்ற ஹஷ்டாக்கை ட்ரண்ட் செய்து வந்தனர்.
எதிர்ப்புகள் அதிகளவில் கிளம்பிய நிலையில், விஜய்சேதுபதியின் கலை பயணத்தில் எதிர்காலத்தில் தேவையற்ற தடை ஏற்படக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அவர் இத்திரைப்படத்திலிருந்து விலக வேண்டுமென முத்தையா முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்-முத்தையா முரளிதரன் கோரிக்கை#MuttiahMuralitharan | #VijaySethupathi | @VijaySethuOffl pic.twitter.com/7ogg2oZtMz
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 19, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025
பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!
February 25, 2025