விஜய் சேதுபதியின் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்த நிஹாரிகா விரைவில் திருமணம் செய்ய போவதாகவும், அவரது வருங்கால கணவரின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. இந்த படத்தில் கௌதம் கார்த்திக், காயத்ரி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இவருக்கு விரைவில் ஒரு ஐடி ஊழியருடன் திருமணம் நடக்கயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனான Venkata chaitanya jonnalagadda என்ற ஐடி துறையில் பணிபுரிபவரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவரான வெங்கட்டுடன் இணைந்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதனையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…