விஜய் சேதுபதியுடன் இணையும் விவேக்
நடிகர் விஜய் சேதுபதி 33வது திரைப்படமான “யாதும் ஊரே யாவரும் கேளிர் ” என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் கிருஷ்ணன் இயக்குகிறார். மேலும் இந்ததிரைப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.
இந்நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அமலா பால் நடிப்பதாக இருந்த நிலையில் அவர் நடிக்கவில்லை. சில காரணங்களால் விலகினார். அவருக்கு பதிலாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவுள்ளார். மேலும் முன்னணி காமெடி நடிகரான நடிகர் விவேக் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் விவேக் இணையும் முதல் திரைப்படம் இதான்.