தளபதிக்கு வில்லன் , அடுத்து இந்த நடிகருக்கு அப்பாவாக நடிக்கிறாராமே விஜய் சேதுபதி.!

விஜய் சேதுபதி அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூரிக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இந்த நிலையில் இவர் தற்போது வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் சூரிக்கு தந்தையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இந்த கதாப்பாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க ஒப்பந்தமானதும் ,அதன் பின் சில காரணங்களால் படத்திலிருந்து விலகிய பின்னர் அதற்கு விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது . எந்த கதாபாத்திரம் ஆனாலும் தனது கச்சிதமான நடிப்பால் விஜய் சேதுபதி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
அமித்ஷா பேச்க்கு வலுக்கும் எதிர்ப்புகள்! ரயிலை மறித்த விசிக, போராட்டம் அறிவித்த திமுக…
December 19, 2024
தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்றைய நிலவரம் என்ன?
December 19, 2024
பயப்படவேண்டாம் மிதமான மழைக்கு தான் வாய்ப்பு! வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
December 19, 2024
ஆப்பிரிக்காவை உலுக்கிய சிடோ புயல்! 45 பேர் பலி!
December 19, 2024