சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்,இது புரியாமல் மிகவும் மோசமான வசைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். என்று ட்வீட் செய்துள்ளார்.
விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.தற்போதுவிஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும், கடைசி விவசாயி, கா பே ராணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். அதனையடுத்து இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியருடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். தற்போது இவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் கடவுளை குளிப்பதை காட்டுகிறார்கள், ஆனால் டிரஸ் அணிவதை திரை போட்டு மூடுகிறார்கள் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்த பேச்சால் இந்துக்களை தவறாக சித்ததரித்ததாக கூறி சில மதவாதிகள் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசி வருகின்றனர். அந்த வீடியோவால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் விஜய் சேதுபதியின் மீது இதற்காக அகில இந்திய இந்துமகா அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில், குழந்தையும் தெய்வமும் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள், இது புரியாமல் மிகவும் மோசமான வகைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள். விரைவில் மாமனிதன் திரைப்படம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…