விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறார்கள்.! ரசிகர்கள் போலீசில் புகார்.!
விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறார்கள் எனவும், அதனை தடுக்க வேண்டும் எனவும் விஜய் சேதுபதி ரசிகர்கள் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி ஓர் ஆண்டுக்கு முன்னர் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசுகையில் கோவிலில் நடைபெறும் அபிஷேகம் பற்றி நடிகரும் திரைப்பட வசனகர்த்தாவுமான மறைந்த கிரேஸி மோகன் கூறியதை நினைவு கூறியிருப்ப்பார்.
அந்த வீடியோ தற்போது இந்து மதத்திற்க்கு எதிராக தவறாக எடிட் செய்யப்பட்டு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரை இணையத்தில் சில விஷமிகள் தகாத வார்த்தைகளால் திட்டி விஜய் சேதுபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறார்கள் அதனை தடுக்க வேண்டும் என விஜய் சேதுபதி தலைமை ரசிகர் மன்றம் சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.