குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தத்தை முடித்த விஜய் சேதுபதி பட நடிகை.!
குடும்ப உறவினர்கள் முன்னிலையில் நேற்றைய தினம் நிஹாரிகா வெங்கட சைதன்யாவுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தில் நடித்தவர் தான் நிஹாரிகா கொனிதேலா. அதனையடுத்து இவர் தெலுங்கிலும் ஒரு சில படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார்.நடிகர் மற்றும் தயாரிப்பாளரான நாகேந்திர பாபுவின் மகளும், சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் அவர்களின் மருமகளும், வருண் தேஜின் தங்கையும், தெலுங்கின் முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன், அல்லு சிரீஷ், ராம் சரண், சாய் தரம் ராஜ் ஆகியோரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் ஆந்திர மாநில குண்டூர் ஐஜி பிரபாகர் ராவ் என்பவரின் மகனான Venkata chaitanya jonnalagadda என்ற ஐடி துறையில் பணிபுரிபவரை நிஹாரிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அவருடன் இணைந்துள்ள புகைப்படத்தையும் நிஹாரிகா பகிர்ந்திருந்தார்.இந்த நிலையில் நேற்றைய தினம் ஹைதராபாத்தில் வைத்து இருவரது நிச்சயதார்த்தமும் நெருங்கிய உறவினர்கள், சைதன்யா குடும்பத்தின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த ஜோடிக்கு பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Pics from @IamNiharikaK‘s Engagement with Chaitanya today at Hyderabad
Best Wishes to the Couple. pic.twitter.com/Bukx5l4b9k
— BARaju (@baraju_SuperHit) August 13, 2020
View this post on Instagram
One for Love ????????. Thank You all . @harmann_kaur_2.0 & @indraneelrathod & AA staff .