அரசியலில் களமிறங்கும் விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன்! இது துக்ளக் தர்பார்!

Default Image
  • விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்க உள்ள திரைப்படங்களில் ஒன்று துக்ளக் தர்பார்.
  • அரசியல் படமாக உருவாகும் இந்த படத்தில் பார்த்திபன், மஞ்சிமா மோகன், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

விஜய்சேதுபதி கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அதில் கடைசி விவசாயி, லாபம், க/பெ ரணசிங்கம் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிவிட்டன. அதுபோக தெலுங்கு படம், ஹிந்தி படம், தளபதி விஜய்யின் மாஸ்டர் என மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் அவர் நடிக்க உள்ள இன்னொரு திரைப்படம் துக்ளக் தர்பார். அரசியல் கதைகளம் கொண்டு இந்த படம் தயாராக உள்ளதாம். இப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன் இருவருமே அரசியல்வாதிகளாக நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தில் ஹீரோயின்களாக மஞ்சிமா மோகன், அதிதி ராவ் என இருவரும் நடிக்க உள்ளனர். இப்பட அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்