நடிகர் விஜய் நேற்று வேன் மீது ஏறி எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது ட்விட்டரில் 3 ஹேஷ்டாக்குகளில் வைரலாகி வருகிறது.
கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய், சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் ஆகிய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்றது. அதில் படப்பிடிப்பு தளத்திலிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு நீலாங்கரை, சாலிகிராமம், பனையூர் உள்ளிட்ட வீடுகளில் சுமார் 20 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடைபெற்று நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நடிகர் விஜய் நெய்வேலியில் உள்ள படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது படப்பிடிப்பு அங்கு நடத்த கூடாது என்று பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் விஜயின் ஏராளமானோர் ரசிகர்கள் அங்கு குவிந்ததால் படப்பிடிப்பு முடித்துவிட்டு திரும்பும் போது ரசிகர்களுக்கு கையசைத்து உற்சாகப்படுத்தி சென்றார்.அப்போது அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி ரசிகர்களை நோக்கி கையசைத்தார் பின்னர் தனது செல்போனை எடுத்து ரசிகர்ளோடு வேன் மீது இருந்தவாறே செல்பி எடுத்து உற்சாகப்படுத்தி விட்டு சென்றார்.
இந்நிலையில் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் ரசிகர்களுடன் தான் எடுத்துக்கொண்ட செல்ஃபியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் அது சமூகவலைத்தலங்களில் வைரலானது.இந்நிலையில் விஜய் எடுத்த அந்த செல்ஃபி தற்போது ட்விட்டரில் இந்தியா அளவில் #ThalapathyVIJAYselfie | #Master #ThalapathySelfie எனும் 3 ஹேஷ்டேக்குகளில் இந்தியா அளவில் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…