100 மில்லியன் பார்வையாளர்களை கொள்ளை கொண்ட விஜய் – சமந்தா பாடல்.!
தளபதி விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். தற்போது இவர் கைதி பட இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீப காலமாக விஜய் படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் ஹிட் செய்து வருகிறது. ஆம் படங்கள் மட்டுமில்லாமல் பாடல்களும் தான். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்திலுள்ள பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் தெறி. ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்த இந்த படத்தில் சமந்தா மற்றும் எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்திலுள்ள ‘உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே’ என்ற பாடல் யூடுபில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளதாக ஜி. வி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் பகிர்ந்துள்ளதாவது, இது தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும், இந்த படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் இது எனது 50வது படம் என்றும் கூறியுள்ளார். தற்போது இதனை தளபதி ரசிகர்கள் மிகவும் கொண்டாடி வருவதோடு, ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.
A steady love for the song …. thanks for this .. it’s special … from my 50th #GV50 … #100MillionforYenJeevan @actorvijay @Atlee_dir @theVcreations @singersaindhavi @thinkmusicindia #namuthukumar https://t.co/MqmIs5BlFr pic.twitter.com/MMlBj4R6Jo
— G.V.Prakash Kumar (@gvprakash) June 2, 2020