தளபதிக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே… அனல் பறக்கும் தளபதி 65 அப்டேட்..!
தளபதி 65 படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர் இந்த படம் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி வெளியாகும் என்று நேற்று அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிக விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆம் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ரஷ்மிகா மந்தனா, மாளவிகா மோகனன், பூஜா ஹெக்டே தேர்வு செய்திருந்தனர். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகன் தளபதியுடன் நடித்து விட்டதால் இயக்குனர் நெல்சன் அவரை தவிர்த்து விட்டார். அதற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டே நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியானது இதுகுறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.