நண்பா வாழ்க்கை நதி மாதிரி..உண்மை இருக்கனுனா!ஊமையா தான் இருக்கனும்..குட்டி ஸ்டோரி-நச்

Default Image

 வாழக்கை நதி மாதிரி; நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். என்ன நடந்தாலும் கடமையை செய்து கொண்டு போய் கொண்டிருக்க வேண்டும் என்று மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குட்டி ஸ்டோரி ஒன்றை ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

Imageநடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா  சென்னையில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசியதாவது: வாழக்கை நதி மாதிரி; நம்மை வணங்குவார்கள், வரவேற்பார்கள், கற்களையும் எறிவார்கள். என்ன நடந்தாலும் கடமையை செய்து கொண்டே, போய் கொண்டிருக்க வேண்டும். இளைய தளபதியாக இருந்த போது ‘ரெய்டு’ இல்லாமல் வாழ்க்கை அமைதியாக இருந்தது. உண்மையாக இருக்க வேண்டும் என்றால் சில நேரம் ஊமையாகவும்இருக்க வேண்டும்.

மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கிவிட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. கொரோனா வைரஸ் காரணமாக ரசிகர்களின் வருகை தவிர்க்கப் பட்டதில் எனக்கு மிகுந்த வருத்தம். ரசிகர்கள் தவிர்க்கப் பட்டதை அரைமனதாகவே நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டேன். நடிகர் விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டுமில்லை மனதிலும் இடம் கொடுத்துள்ளார்.

Image

இயக்குஹர் லோகேஷ் கனகராஜ், மாநகரம் படம் மூலமாக திரும்பி பார்க்க வைத்தார். கைதி படத்தை திரும்பி திரும்பி பார்க்க வைத்தவர் அவர். மாஸ்டர் படத்தில் என்ன பண்ண போறார் என்று நானும் காத்திட்டிருக்கேன். பேசி கொண்டிருக்கும் பொழுது எப்பொழுதும் போல் இல்லாமல் தற்போது கோட் போட்டு வந்துருக்கீங்க என்று விஜயிடம் கேட்டதற்கு? நண்பர் அஜித் ஸ்டைலில் வரலாம் என தான் இன்று, கோட் போட்டு வந்திருக்கிறேன் என்று பதிலளிக்க கூடியிருந்தவர்கள் ஆரவாரம் செய்தனர்.

Image result for master audio launch

இவ்விழாவில் நடிகர் விஜய் தனது குடும்பத்தினர் அனைவருடனும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்