விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும் ; பீஸ்ட் அற்புதமான படமாக இருக்கும் – நடிகர் ஷாகித் கபூர்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் தான் பீஸ்ட். படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்த படத்திற்க்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசி உள்ள பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் அவர்கள், நான் விஜய்யின் தீவிர ரசிகன். அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர். அவரது நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். பீஸ்ட் படம் நிச்சயம் ஒரு அற்புதமான படமாக இருக்கும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.