கௌதம் மேனன், நலன் குமாரசாமி, விஜய் மற்றும் வெங்கட் பிரபு இயக்கும் ஆந்தலாஜி திரைப்படத்தில் ஏ. எல். விஜய் இயக்கும் பாகத்தில் மேகா ஆகாஷ் மற்றும் அமிதாஷ் பிரதான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் கணேஷ் தயாரிப்பில் ஒரு ஆந்தலாஜி படத்தை பிரபல இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன், ஏ. எல். விஜய், நலன் குமாரசாமி மற்றும் வெங்கட பிரபு ஆகியோர் இணைந்து இயக்கவுள்ளனர். ‘குட்டி லவ் ஸ்டோரி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் நான்கு இயக்குநர்கள் வித்தியாசமான காதல் கதைகளை கூறுவதாக இருந்தது.
இந்த ஆந்தலாஜி படத்தில் நலன் குமாரசாமி இயக்கும் பாகத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. . இவர்கள் இருவரும் ஏற்கனவே சூடு கவ்வும், காதலும் கடந்து போகும் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கும் பாகத்தில் அமலாபால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் இந்த ஆந்தலாஜி படத்தில் ஏ. எல். விஜய் இயக்கும் பாகத்தில் ஹீரோயினாக மேகா ஆகாஷ் அவர்களும், ஹீரோவாக அமிதாஷ் பிரதான் அவர்களும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமிதாஷ் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…