விஜய் மக்கள் இயக்கத்தின் 50 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் விஜய்.!

விஜய் மக்கள் இயக்கத்தின் 50 மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார் . இதனால் அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . இதனையடுத்து சமீபத்தில் விஜய் அவர்களின் தந்தையும் , இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் , அதனை கேள்விப்பட்ட விஜய் அந்த கட்சிக்கும் , தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதுடன் , தனது பெயரோ அல்லது புகைப்படமோ அந்த கட்சிக்காக பயன்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , தந்தை மற்றும் மகன் இடையே உள்ள மோதலும் பெரிதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் விஜய் இன்று தனது சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் வைத்து தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் மொத்தமாக 200 மாவட்ட நிர்வாகிகள் உள்ள நிலையில் திருச்சி ,கரூர் , பெரும்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் உள்ள 50 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025