நடிகர் விஜய் கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.1.30 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி ,நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி அளித்துள்ளனர்.மேலும் பலரும் நிதி வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் , தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரளாவுக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும்.
மேலும் ஃபெப்சிக்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் .பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ ரசிகர் மன்றங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் விஜய்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…