மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றில் தல தோனி குறித்து விஜய் பேசிய வசனம் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .மேலும் இந்த படத்தினை வீட்டிலிருந்தே பார்க்கும் வகையில் அண்மையில் ஓடிடி தளமான அமேசான் பிரேமில் வெளியாகி அங்கையும் மக்களின் அதிகப்படியான வரவேற்பை பெற்று வருகிறது.
மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் என்றும் ,அது அதிகம் என்பதால் பல காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.அந்த வகையில் தற்போது மாஸ்டர் படத்திலிருந்து நீக்கப்பட்ட ஒரு காட்சியை அமேசான் வெளியிட்டுள்ளது .அதில் தோனி பிரஷர் ஆகும் நேரத்தில் கூலாக முடிவு எடுப்பதால் தான் நாம எல்லோருமே அவரை கேப்டன் கூல்ன்னு கூப்பிடுறோம் என்று தல தோனி குறித்து வசனம் பேசுகிறார் விஜய்.அதன் பின் பெண்கள் அணியும் ஆடையால் தான் அசம்பாவிதம் நடப்பதாக கூறுபவர்களும் தக்க பதிலடி கொடுப்பதுடன் ,ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் அல்லாமல் எவ்வாறு பெண்களை தொட வேண்டும் என்று சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் மாஸாக கூறும் விஜய்யின் அந்த டெலிட் காட்சி கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…