தமிழ் சினிமாவில் தனக்கனே தனிப்பாணி வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி பெரிய வெற்றி படங்களில் அசுரன் படமும் இணைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால், 100 நாட்கள் கடந்த அசுரன் படத்துக்கு வெற்றி விழா நேற்று சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். பின்பு 100-வது நாள் நினைவுப் பரிசு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய அனைவரும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் நன்றி தெரிவித்தார்கள். பின்னர் இந்த விழாவில் நடிகர் பவன் பேசும்போது, ஒரு படத்துக்கு 100-வது நாள் விழா என்பது ரொம்பவே அரிதாக நடக்கிறது. இதற்கு முன்பு குருவி’ படத்தின் 150-வது நாள் விழாவில்தான் கலந்து கொண்டேன். அது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று பேசினார். அவரது பேச்சைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் அதிர, இதனை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் தன் சிரிப்பை அடக்கிக் கொள்ள எவ்வளவோ முயன்றும் மேடையிலேயே சிரித்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பிய இவரது பேச்சி சமூகவலைத்தளத்தில் அவர்களது கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இறுதியாக தனுஷ் பேசும்போது, தன் பேச்சில் தொடக்கத்திலேயே, அசுரன் படத்தின் 100-வது நாள் விழா நடைபெறுவதில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான விழாவில் நாம் பேசுவது மட்டும்தான் நம்முடைய கையில் இருக்கும். எது சரியோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். எது சரியில்லையோ அதை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் நடிகர் பவன் விஜய்யுடன் குருவி, அஜித்துடன் ஏகன், தனுஷ் உடன் வடசென்னை, அசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
சென்னை : சூர்யா ரசிகர்களுடைய கவனம் முழுவதும் ரெட்ரோ படத்தின் மீது தான் இருக்கிறது. தரமான படங்களை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்…
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…