தனது குழந்தையுடன் இணைந்துள்ள அழகான புகைப்படத்தை பகிர்ந்த விஜய் பட நடிகை.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
நடிகை சங்கவி தனது பெண் குழந்தையுடன் இணைந்துள்ள அழகான புகைப்படத்தை பகிர, தற்போது அது வைரலாகி வருகிறது.
தல அஜித்தின் அமராவதி எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சங்கவி .அதனை தொடர்ந்து விஜய்யுடன் ரசிகன் , விஷ்ணு, கோயம்புத்தூர் மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர் வெங்கடேஷ் என்ற ஐடி ஊழியரை கடந்த 2016-ல் திருமணம் செய்து கொண்டார்.
அதனையடுத்து அவர் கொளஞ்சி எனும் படத்தில் மட்டுமே நடித்திருந்தார் . கடந்த ஜனவரி மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது . தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram