"பிகில்" படம் பார்க்க வந்தவர்களுக்கு 2000 விதைப்பந்து கொடுத்த விஜய் ரசிகர்கள்..!
பல்வேறு சர்ச்சைகளுக்கும் , விமர்சனங்களுக்கு பிறகு இன்று “பிகில்” திரைப்படம் வெளியாகி உள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பிகில் திரைப்படத்திற்கு பேனர் வைப்பதற்கு பதிலாக ரசிகர்கள் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வந்தனர்.
இந்நிலையில் இன்று “பிகில்” திரைப்படம் வெளியானது முன்னிட்டு பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் “பிகில்” திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு விஜய் ரசிகர் மன்றத்தினர் 2000 விதைப்பந்துகள் இலவசமாக கொடுத்தனர். இந்த செயல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.