பிகில் படத்தால் 1,50,000 அபராதம் கட்டும் விஜய் ரசிகர்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த படம் கடந்த 25-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்ப்பதற்கு, திரையரங்குகளில் ரசிகர்களை அலைகடலென திரண்டு வந்தனர்.
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பிகில் படத்திற்கு சிறப்பு காட்சி கேட்டு ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டனர். இதில் 50 விஜய் ரசிகர்கள் போலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதில், 28 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இந்த 28 பேரும் தினமும் காலை 9:30 மணிக்கு காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும். மேலும், இவர்கள் 98 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை சேதப்படுத்தியதால், ரூ.1.50 லட்சம் அபராதமும் செலுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.