திரையரங்கில் ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்! விரட்டியடித்த போலீசார்!

Default Image

இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. பல சர்ச்சைகளில் சிக்கிய நிலையில், சில நாட்களுக்கு முன்னதாக விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, பிகில் உள்ளிட்ட எந்த படத்திற்கும் சிறப்புக்காட்சிகள் திரையிட அனுமதி இல்லை என அறிவித்திருந்தார். மேலும், அரசின் நிபந்தனைக்கு உட்படும் பட்சத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, சிறப்பு காட்சிகள் ஒளிபரப்ப சிக்கல் நிலவிய நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து பல இடங்களில் பிகில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திரையரங்கு ஒன்றில் பிகில் சிறப்பு காட்சிகள் நள்ளிரவில் வெளியாவில்லை. இதனையடுத்து, அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்கள், பொலிஸாரின் தடுப்புகளையும், சிசிடிவி கேமராக்களை உடைத்து, கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட விஜய் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்