தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா.!

Default Image

தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராகவிஜய் தேவரகொண்டா  கொதித்தெழுந்துள்ளார். 

கொரோனா நெருக்கடியின் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது மட்டுமில்லாமல் திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதிலும் தெலுங்கு திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்தது மட்டுமில்லாமல் பலரிடம் உதவியையும் கேட்டுள்ளார். மேலும் உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்யவும் அறிவித்திருந்தார். அவர் தன்னுடைய பணமான ரூ. 25 லட்சத்துடன், அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டி கிடைத்த ரூ. 75 லட்சத்தையும் கொண்டு 7500 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். 

இந்த நிலையில் இவருக்கு படங்கள் தோல்வியை தழுவிய பணம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு செய்கிறார் என்று ஆந்திர இணையதளம் ஒன்று தவறான செய்திகளை பரப்பியுள்ளது. இதனால் கோவமடைந்த விஜய் தேவரகொண்டா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆந்திரா நாளிதழ் இரு நாட்களுக்கு முன்பு பேட்டி கேட்டதாகவும், மறுத்ததால் இவ்வாறான புரளியை பரப்புவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற தவறான ஊடகங்களால் இயக்குநர்கள், நடிகர்கள் பலர் பாதிப்படைவதாகவும், நம்மை போன்றவர்களை குறித்து தவறான செய்தியை பதிவிட்டு பணம் வாங்குகிறார்கள் என்றும், நான் உழைத்து சம்பாதித்த பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவேன், நீங்கள் கேட்க யார் என்றும், இது போன்ற போலியான ஊடகங்களை நம்பாதீர்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இதற்கு தெலுங்கு திரையுலகினர் பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். நடிகர் சிரஞ்சீவி, இதுபோன்ற அவதூறுகளால் நானும் எனது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்குறோம் என்று கூறி ஆதரவளி த்துள்ளார்.  அதனை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு, நான் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கூறியுள்ளார். இதுபோன்று பல பிரபலங்கள் ராஷி கன்னா, ராதிகா சரத்குமார், ராணா டக்குபதி, கொரட்டால சிவா, நாகார்ஜுனா, ரவி தேஜா என பலர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்