தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் விஜய் 65 படத்திற்காக 20கோடி ரூபாய் தனது சம்பளத்தில் இருந்து குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா தொற்றால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளவர்களில் தயாரிப்பாளரும் ஒருவர். எனவே அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் மற்றும் நடிகைகள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த வகையில் விஜய் ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத்தி சிங் உட்பட பலர் சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அது மட்டுமின்றி பாலிவுட், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பலர் சம்பளத்தை குறைத்தனர்.
இந்த நிலையில் விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் விஜய் – 65 படத்திற்காக ரூ. 100கோடி சம்பளத்தை கேட்டதை அடுத்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்பளத்தை குறைக்குமாறு கேட்டு கொண்டனர். இந்த நிலையில் தற்போது விஜய் அவர்கள் தனது சம்பளத்திலிருந்து ரூ. 20கோடியை குறைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் குறைக்க கேட்டதாகவும், அதற்கு விஜய் தரப்பிலிருந்து மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் அவர்கள் சம்பளத்தை குறைத்து கொள்லாததால் படத்தை கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின, அது முற்றிலும் தவறான செய்தி என்றும், ஊரடங்கு முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…