தளபதி -65க்காக சம்பளத்திலிருந்து  ரூ.20கோடி குறைத்து கொண்ட  விஜய் .?

Default Image

தளபதி விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் விஜய் 65 படத்திற்காக 20கோடி ரூபாய் தனது சம்பளத்தில் இருந்து குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்றால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பிற்குள்ளாகியுள்ளவர்களில்   தயாரிப்பாளரும் ஒருவர். எனவே அவர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு நடிகர் மற்றும் நடிகைகள் தாமாக முன்வந்து சம்பளத்தை குறைத்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த வகையில் விஜய் ஆண்டனி, கீர்த்தி சுரேஷ், ரகுல் ப்ரீத்தி சிங் உட்பட பலர் சம்பளத்தை குறைத்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. அது மட்டுமின்றி பாலிவுட், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் பலர் சம்பளத்தை குறைத்தனர்.

இந்த நிலையில் விஜய் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் விஜய் – 65 படத்திற்காக ரூ. 100கோடி சம்பளத்தை கேட்டதை அடுத்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம் சம்பளத்தை குறைக்குமாறு கேட்டு கொண்டனர். இந்த நிலையில் தற்போது விஜய் அவர்கள் தனது சம்பளத்திலிருந்து ரூ. 20கோடியை குறைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும் குறைக்க கேட்டதாகவும், அதற்கு விஜய் தரப்பிலிருந்து மறுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் அவர்கள் சம்பளத்தை குறைத்து கொள்லாததால் படத்தை கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின, அது முற்றிலும் தவறான செய்தி என்றும், ஊரடங்கு முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்