அனுப்பட்டது சம்மன் ..!3 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும்..!
சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம்; எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்குமே சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறைத் தகவல் தெரிவித்துள்ளது.
ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில் இயக்குநா் அட்லி இயக்கத்தில் நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று பிகில் படமானது வெளியானது. 150 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் வெற்றி பெற்றதாக படக்குழுவாலே அறிவிக்கப்பட்டது.
படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் ரூ.300 கோடி வரை லாபம் சம்பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. படத்தின் வருமான விவரத்தை படக் குழு மறைத்ததாகக் கூறப்பட்டது.இந்த தகவல்களின் அடிப்படையில், சென்னையில் உள்ள ஏ.ஜி.எஸ் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் வருமானவரித்துறையினா் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையை நடத்தினர்.
இந்த சோதனையில் ‘பிகில்படத்துக்கு மதுரையைச் சோ்ந்த பைனான்சியரும், திரைப்படத் தயாரிப்பாளருமான அன்புச்செழியன் தான் நிதி உதவி செய்திருப்பது தெரியவரவே அன்புச்செழியனுக்குச் சொந்தமான மதுரை, சென்னை உள்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினா் அதிரடி சோதனை நடத்தியது.மேலும் படத்தில் நடித்த நடிகா் விஜய்க்கு பல கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகய் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்து வந்து பனையூரில் உள்ள அவரது பங்களாவில் வைத்து வருமானவரித்துறை விசாரித்தது.சென்னை மற்றும் மதுரையில் கிட்டத்தட்ட 35க்கும் மேற்பட்ட இடங்களில்ஒரே நேரத்தில் நடைபெற்ற சோதனைகள் படிப்படியாக நிறைவடைந்தது.
ஆனால் ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட், கல்பாத்தி எஸ் அகோரம் இல்லம் மற்றும் அன்புச்செழியன் ஆகியோர் வீடு, அலுவலகம் என பல இடங்களில் நான்கு நாள்களாக நடைபெற்று வந்த சோதனையின் முடிவில், அன்புச்செழியன் 165 கோடி ரூபாய் வருவாய் ஏய்ப்பு செய்ததாக தெரியவந்தது.இந்நிலையில் இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகர் விஜய் உட்பட மூவருக்கும் வருமான வரித்துறைஅதிகாரிகள் தற்போது சம்மன் அனுப்பி உள்ளனர்.
வருமான வரித்துறை அதிகாரிகள் இது குறித்து கூறியதாவது:சென்னை மற்றும் மதுரையில் நடந்த வருமான வரி சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மட்டுமல்லாமல் கணக்கு விபரங்கள் உட்பட பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளன.சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம்; எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்குமே சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.இம்மூவரும் இன்னும் மூன்று நாட்களுக்குள் ஆஜராகி கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.