விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்த விஜய் .!
விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய தலைவர்களை விஜய் நியமித்துள்ளார் .
நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார் . இதனால் அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . இதனையடுத்து சமீபத்தில் விஜய் அவர்களின் தந்தையும் , இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார் .
அதனை கேள்விப்பட்ட விஜய் அந்த கட்சிக்கும் , தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும்,யாரும் அக்கட்டுரையில் சேர வேண்டாம் என்றும் கூறியதுடன் , தனது பெயரோ அல்லது புகைப்படமோ அந்த கட்சிக்காக பயன்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , தந்தை மற்றும் மகன் இடையே உள்ள மோதலும் பெரிதாக பேசப்பட்டது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் மொத்தமாக 200 மாவட்ட நிர்வாகிகள் உள்ள நிலையில் திருச்சி , கரூர் , பெரும்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் உள்ள 50 மாவட்ட நிர்வாகிகளை விஜய் தனது சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்பட்டது .
இந்த நிலையில் தற்போது தனது விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய மாவட்ட தலைவர்கள், இளைஞரணி தலைவர்கள், தொண்டரணி தலைவர்கள், மாணவர் அணி தலைவர்கள், வர்த்தக அணி தலைவர்கள் என சென்னை , கோவை, திருச்சி, மதுரை, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகளை விஜய் நியமனம் செய்துள்ளார் . மேலும் தனது புகைப்படம், இயக்கத்தின் பெயர் , கொடி உள்ளிட்டவைகளை பயன்படுத்த மாவட்ட பொறுப்பாளர்கள், அணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோரின் அனுமதி பெற வேண்டும் என்றும் , இதனை மீறுபவர்கள் மீது இயக்கத்தின் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சற்றுமுன்
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளர் மற்றும் இளைஞரணி தலைவராக என்னை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மக்கள் இயக்க தலைவர் #தளபதி விஜய் அவர்களுக்கும் மாநில பொறுப்பாளர் புஸ்ஸி.N.ஆனந்து Ex.MLA அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி..நன்றி..நன்றி.
என்றும் தளபதி வழியில் எங்கள் பயணம் தொடரும்!! pic.twitter.com/cPVXAIQRvf— Dr.ECR.P.Saravanan (@Dr_Ecr_official) November 11, 2020