பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கிறார்.
இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பரவல் காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த போது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சசி வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், இரண்டாம் பாகத்தை அவர் இயக்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இதற்கான அதிகார்வப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அறிவித்துள்ளார். மிரட்டலான சாமி போஸ்டருடன் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்குவார் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளரை கடந்து கதாசிரியராகவும் தற்போது விஜய் ஆண்டனி களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் தற்போது பிப்ரவரி 6 அன்று வெளியிட தயாராகி வருகிறது. இந்த படத்தில்…
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட்…
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும்…
சென்னை : விஜய்யின் கடைசி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜன.26ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.…
சென்னை : பஞ்சாப் மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை அன்னை தெரசா பல்கலைக்கழகம்…
சென்னை : நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை, விஜய் நடித்த தெறி, பிகில், விஜய் சேதுபதியுடன் விக்ரம் வேதா என…