தனது சம்பளத்தை குறைத்து கொள்ளுங்கள் விஜய் ஆண்டனி.!
தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, அவரே முன்வந்து தான் நடிக்கும் படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்தில் 25%ஐ குறைத்து கொள்ளுமாறு மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் கூறியுள்ளாராம்.
விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட ஆவர், அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார்.
பெப்சி சிவா தயாரிப்பில் “தமிழரசன்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிக்கும் “அக்னி சிறகுகள் ” படத்திலும், இயக்குநர் செந்தில்குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் வழங்கும் “காக்கி” திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் 2020வெளியிட திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது மட்டுமில்லாமல் வேலைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளும் மூடப்பட்டுள்ள நிலையில் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டு புது படங்கள் வெளியாக இன்னும் மூன்று மாதங்களாவது ஆகும் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதனால் பல திரைப்படத் துறை ஊழியர்கள் அனைவரும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. எனவே தன் படங்களின் தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு விஜய் ஆண்டனி, அவரே முன்வந்து தான் நடிக்கும் படத்திற்காக அவர் வாங்கும் சம்பளத்தில் 25%ஐ குறைத்து கொள்ளுமாறு மூன்று படங்களின் தயாரிப்பாளர்களுக்கும் கூறியுள்ளாராம். இதன் மூலம் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களின் மொத்த பட்ஜெட்டை குறைத்து வெகு விரைவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் வெளியிட முடியும் என்று நம்புகிறார் விஜய் ஆண்டனி.
இதனை பாராட்டி “அக்னி சிறகுகள்” படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், 50நாட்களை தொட இருக்கும் இந்த கொரோனா ஊரடங்கில் தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனை கருத்தில் கொண்டு தாமாகவே முன்வந்து சம்பளத்தை குறைத்தது அனைவரும் பாராட்ட வேண்டியது, இதை போன்று அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களது சம்பளத்தை குறைத்து இந்த இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து அனைத்து தயாரிப்பாளர்களையும் காப்பாற்றுங்கள் என்றும், அவ்வாறு செய்தால் வெளிவர காத்திருக்கும் படங்களும், முடிக்கவிருக்கும் படங்களும் எந்த வித நிதி சிக்கலும் இல்லாமல் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு ஒரு செயலை செய்து பலருக்கும் முன்னுதாரணமாக இருந்த விஜய் ஆண்டனி அவர்களை மனதார பாராட்டுகிறேன் என்றும், மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன் என்றும் கூறியுள்ளார்.
சம்பளத்தை குறைத்த #VijayAntony வாழ்த்துக்கள் @vijayantony ???????????? pic.twitter.com/oYN99PXaS4
— Diamond Babu (@idiamondbabu) May 5, 2020