மாஸ்டர் படத்தின் அனுபவங்களை குறித்து நடிகர் சாந்தனு நேரலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கிய நிலையில், படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகரும், தளபதியின் தீவிர ரசிகருமான சாந்தனு முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தியும், பேட்டிகளில் பங்கேற்றும் வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சாந்தனு, நேரலை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு மாஸ்டர் படத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, மெய் சிலிர்க்க வைக்கும் காட்சிகள் இந்த படத்தில் நிறைய இருப்பதாகவும், வழக்கமான விஜய் அண்ணாவாக இல்லாமல், அவரே பல இடங்களில் தன்னை மாற்றி நடித்திருப்பதை ஷூட்டிங்கில் பார்த்ததாகவும், வித்தியாசமான விஜய் அண்ணாவை திரையில் பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மாஸ்டர் திரைப்படம் வழக்கமான விஜய் அண்ணா படமாக இருக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்ததாகவும், அப்போது தான் மக்கள் மத்தியில் ரீச் இருக்கும் என நினைத்ததாக கூறியுள்ளார். மேலும் வாத்தி கமிங் பாடலுக்கு விஜய் அண்ணாவின் நடன அசைவுகள் அனைத்து வேற லெவலில் இருந்ததால் மாஸ்டர் படக்குழு கைதட்டி விசிலடித்ததாகவும், அந்த பாடல் காட்சிகள் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
ஆப்பிரிக்கா : இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வலுப்பெற்றது. இதனையடுத்து, இந்த…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…