மீண்டும் திருப்பாச்சி இயக்குனருடன் கைகோர்க்கிறாரா தளபதி விஜய்! அரசியல் சரவெடி தான்!

Default Image

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக பிகில் திரைப்படம் வெளியாக உள்ளது. இதனை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த பட ஷூட்டிங் பிகில் படம் வெளியாவதற்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து விஜயின் 65வது படத்தினை யார் இயக்குவார் என கேள்வி ரசிகர்கள் மனதில் இருந்தது. விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய  வெற்றி படங்களை இயக்கிய  பேரரசு விஜயுடன் விரைவில் ஒரு படம் பண்ண போகிறார் என தகவல் வெளியானது.

தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டண்ட் இயக்குனர் ஜாகுவார் தங்கம் ஒரு திரைப்பட விழாவில் பேரரசு பற்றி கூறுகையில் விரைவில் விஜயை வைத்து இயக்க போகும் பேரரசுவிற்கு வாழ்த்துக்கள் என கூறினார். இப்படம் அரசியல் கதைக்களம் கொண்டு உருவாக உள்ளதாக தகவல் வெளிவருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்