இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்த பின் நேற்று திருப்பதி மலைக்கு வந்த விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதி ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டனர்.
அதன் பிறகு, அவர்கள் கோவிலுக்கு வெளியே வந்து திருப்பதி மலையில் காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டுள்ள ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று போட்டோஷுட் நடித்தினார்கள்.
இந்நிலையில், புகைப்படம் எடுத்தபோது காலணிகள் அணிந்து வந்ததால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, விக்னேஷ் சிவன் தேவஸ்தான அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் “திருமணம் முடிந்த மறுநாள் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு வந்ததாகவும் கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் போட்டோ ஷாட் எடுக்கும் போது அவசரம் காரணமாக நானும் நயன்தாராவும் காலனி அணிந்திருந்ததை உணர வில்லை என்றும் கூறியுள்ளார்.
கடவுளுக்கு எந்த அவமரியாதையும் செய்யவில்லை என்றும் எங்கள் செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று மன்னனிப்பு கேட்டுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாடும்…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
அலகாபாத்: குக்கு வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் மூலம் புகழ் பெற்ற நடிகை ரம்யா பாண்டியனுக்கும், யோகா…
ஹைதராபாத் : மாநிலம் பஞ்சகுட்டா சாலையில் நடந்த சம்பவம் ஒன்று வேடிக்கையாகவும் அதே சமயம் நெஞ்சைச் சற்று பதறவும் வைத்துள்ளது.…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த அமரன் படம், உலகளவில் ரூ.180 கோடி வசூல் செய்துள்ளதாக…