பிரமாண்ட செஸ் நிகழ்ச்சியை இயக்க தயாரான விக்னேஷ் சிவன்… அப்போ அஜித் பட நிலைமை.?!
சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான துவக்க விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த செஸ் விளையாட்டு தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பெரிய பெரிய விவிஐபிக்கள் வரவுள்ளனர். மேலும், இரண்டு பெரிய முன்னணி இசையமைப்பாளர்கள் இசை நிகழ்ச்சி நடத்தவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அந்த விழாவை நானும் ரௌடி தான் போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்து முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறப்படுகிறது.
இந்த செய்தியை பார்த்த அஜித் ரசிகர்கள் சோகத்துடன், இன்னும் சில மாதங்கள் தான் அஜித் சாரின் 62 வது படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. அதனால், படத்தின் திரைக்கதை எழுதும் பணிகளை தொடங்களாம், அதனை கைவிட்டு செஸ் போட்டியை இயக்க இருக்கிறாரே என கூறிவருகிறார்கள்.