விக்னேஷ் சிவன் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகும் ‘சூரரை போற்று’ நடிகர்.! ஹீரோயின் இந்த பிரபல பாடகியா.?
விக்னேஷ் சிவன் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தின் மூலம் சூரரை போற்று படத்தில் நடித்த கிருஷ்ணகுமார் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவன் பல படங்களை நயன்தாராவுடன் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர்கள் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு ‘வாக்கிங்/டாக்கிங் ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம்’ என்று டைட்டில் வைத்துள்ளதாகவும், இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான வி.விநாயக் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இன்று பூஜையுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது .
வித்தியாசமான காதல் ரொமான்ஸ் படமாக உருவாகும் இந்த படத்தின் மூலம் கிருஷ்ணகுமார் ஹீரோவாக அறிமுகமாகிறார் .இவர் சூர்யாவின் சூரரை போற்று படத்தில் அவரது நண்பராக நடித்து பிரபலமடைந்தார் .மேலும் இந்த படத்தில் கிருஷ்ணகுமாருக்கு ஜோடியாக பாடகி ஜொனிடா நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் இடம்பெற்ற செல்லம்மா என்ற ஹிட் பாடலை பாடிவர் என்பது குறிப்பிடத்தக்கது.விரைவில் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர் நடிகைகள் குறித்த விவரங்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
We are happy to announce that our next film #WalkingTalkingStrawberryIcecream is all set to rock the floors!! ???? pic.twitter.com/cYcbZCaePW
— Rowdy Pictures Pvt Ltd (@Rowdy_Pictures) February 27, 2021