வியட்நாம் கனமழை காரணமாக அங்கு ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 90 பேர் பலி, 34 பேர் மாயம் ஆகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே வியட்நாமில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக குவாங் டிரை, துவா தியென் ஹியூ மற்றும் குவாங் நாம் ஆகிய மூன்று மாகாணங்களிலும் மிக அதிகமான கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் உயிர் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தற்பொழுது அழைத்துச் செல்லப்பட்டு கொண்டுள்ளனர். இதுவரை ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் வியட்நாமில் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், 870 ஹெக்டேர் நெல் வயல்களும் ஆயிரத்து 37,500 க்கும் அதிகமான விளைநிலங்களும் நீரில் மூழ்கி நாசம் அடைந்துள்ளது. லட்சக்கணக்கான கால்நடைகள் விலங்குகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
மரங்கள் பல சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வந்தாலும் குவாங் டிரை மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் ஒன்று முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை வியட்நாமில் ஏற்பட்ட பேரழிவில் 90 பேர் பலியாகியுள்ளதாகவும், 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும், இயற்கை பேரழிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான மத்திய குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் 37,500 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இன்னும் சில தினங்களுக்கு வியட்நாமில் கனமழை பெய்யும் என்பதால் பாதுகாப்பு துறையினர் இதுகுறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…