ஊரடங்கை பயனுள்ள வகையில் மாற்றிய வித்யூலேகா.! 30கிலோ உடல் எடை குறைப்பு.!
வித்யூலேகா தனது ஊரடங்கு காலத்தை உடல் எடையை குறைத்து பயனுள்ளவாறு மாற்றியுள்ளார்.
ஜீவா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூலேகா ராமன். இவர் நடிகர் மோகன் ராமன் அவர்களின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து வீரம், வேதாளம், மாஸ், பவர் பாண்டி உள்ளிட்ட படங்களிலும், பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது உடல் பருமனாக இருப்பதை அனைவரும் கலாய்த்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு நேரத்தில் 30 கிலோ வரை உடல் எடையை குறைத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் நான் அதிக எடையுடன் இருந்த போது எல்லோரும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி நீங்கள் எப்படி இவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள். என் வாழ்நாள் முழுவதும் பருமனாக இருப்பேன் என்ற உண்மையை புரிந்து கொண்ட நான் உடல் எடையை குறைக்க முடிவு செய்தேன். இன்று நான் உண்மையில் என்னை பற்றி நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஏனென்றால் நான் நினைத்து பார்க்க முடியாததை செய்தேன். என் வாழ்கை முறையையும், பழக்கத்தையும் மாற்றினேன். நீங்கள் சரியாக இருந்து வாரம் 6முறை உடற்பயிற்சி செய்து சீரான உணவு வகைகளை பின்பற்ற வேண்டும். எந்த மருந்தும் பயன்படுத்தவில்லை, தூய்மையான கடின உழைப்பு மட்டுமே. வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.