முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்க உள்ளாராம் வித்யாபாலன்!
பாலிவுட்டின் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வித்யாபாலன். இவர் ஏற்கனவே நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட டர்ட்டி பிக்சர் திரைப்படத்தில் சில்க் ஸ்மிதா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு சிறந்த நடிகை எனும் பட்டத்தையும் கொடுத்து.
தற்போது சகுந்தலா தேவி எனும் பெண் கணிதமேதையை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படத்தில் சகுந்தலா தேவியாக நடித்து வருகிறார்.
அடுத்ததாக ஜவர்கலால் நேருவின் மகளும் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தற்போது வித்யாபாலன் இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவரும் நடிக்க சம்மதித்து விட்டதாக தெரிகிறது. அதற்காக இந்திரா காந்தி இருக்கும் வீடியோக்களை தற்போது வித்யா பாலன் கவனித்து வருகிறாராம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.