வீடியோ – குலத் தெய்வ கோவிலில் குடும்பத்துடன் சூர்யா.!
நடிகர் சூர்யா தனது குடும்பத்துடன் குலத் தெய்வ கோவிலில் சென்றுள்ளார்.
பிரபல முன்னாள் நடிகரான சிவக்குமார் அவர்களின் மகன்கள் தான் தற்போதைய தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி. தமிழ் சினிமாவின் பல நட்சத்திர காதல் ஜோடிகள் இருந்தாலும் அனைவரது பேவரட் என்று வருகையில் சூர்யா மற்றும் ஜோதிகா தான். இருவரும் இணைந்து முதலில் நடித்த படம் பூவெல்லாம் கேட்டுபார். அதனை தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்த இவர்கள் காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சினிமாவை விட்டு சிறிது ஆண்டுகள் விலகியிருந்த ஜோதிகா கணவரின் உதவியால் 36 என்ற ரீமேக் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது சூர்யா சுதா கொங்காரா இயக்கத்தில் சூரரை போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனையடுத்து ஹரி இயக்கும் அருவா படத்திலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் கமிட்டாகியுள்ளார் சூர்யா. அவரின் இளைய சகோதரரான கார்த்தி கைதி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு அலாவுதீன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கவுள்ளார் கார்த்தி. மேலும் இவர்கள் இருவரும் அகரம் அறக்கட்டளை மூலம் ஏழை மக்களுக்கு கல்விக்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களது குழந்தைகளுடன் குலத் தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் ஈரோடில் உள்ள குலத் தெய்வ கோவிலில் சூர்யா தனது மனைவி, குழந்தைகளுடன் வழிபட சென்றுள்ளார். அதில் அவரது மகள் பட்டுபாவாடை அணிந்தும், மகன் வேட்டி சட்டையிலும் உள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. சமீபத்தில் ஜோதிகா ஒரு விழாவில் உண்டியலில் காசு போடுவதை போன்று பள்ளிகளுக்கும் கொடுங்கள் என்று கூறியதை பலர் இந்துக்களை அவமதிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு குலதெய்வம் கோயிலில் குடும்பத்துடன் #சூர்யா#Suriya Family in Erode Temple December 2019@Suriya_offl #Jyothika pic.twitter.com/UMS0UHgnGq
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) May 3, 2020