நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
சமீரா ரெட்டி, இவர் இந்தி படங்களின் மூலம் தான் சினிமாவுலகிற்கு அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை பெற்றார். அதனையடுத்து 2014இல் அக்ஷய் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் , பல பிரபலங்கள் ஜாலியான வீடியோக்களையும், பழைய புகைப் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.தினமும் தனது இரண்டு குழந்தைகளுடன் அழகான வீடியோவை பதிவிடும் இவர், தற்போது தனது இன்ஸ்டாகிராம் தனது இரண்டு குழந்தைகளுடன் சமீரா செய்யும் சேட்டைகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதனுடன் எனக்கு சலிப்படைய நேரம் கிடைக்கிறதா, இல்லை என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா - நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது.…
புதுச்சேரி: ஃபெஞ்சல் புயலால் பெருமழை பாதிப்பில் சிக்கிய புதுச்சேரியில் அதிகம் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் உள்ளிட்ட இடங்களில்…
கடலூர்: பெஞ்சல் புயல் கனமழை காரணமாக வட தமிழக மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் இன்னும் வெள்ள…
சென்னை: வடசென்னை உயர்கல்வித்துறை சார்பில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில், ரூ.1,383 கோடி மதிப்பீட்டில் 79 புதிய திட்டப் பணிகளை…
சென்னை: ஃபெஞ்சல் புயல், கனமழை வெள்ளம் காரணமாக விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடும் பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல்,…
விழுப்புரம் : பெஞ்சள் புயல், வெள்ளம் காரணமாக முதல் மாவட்டமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.…