“இரண்டாம் குத்து” படத்திலிருந்து வெளியான ஸ்னீக் பீக் வீடியோ.!

Default Image

சந்தோஷ் ஜெயகுமாரின் இரண்டாம் குத்து திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதை அடுத்து தற்போது அந்த படத்திலிருந்து 3 நிமிட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இரட்டு அறையில் முரட்டு குத்து’.படு மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் செய்தது . இந்த படத்தில் கௌதம் கார்த்திக்,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் .  அதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது .

அதன்படி ‘இரண்டாம் குத்து” என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பல விமர்சனங்களையும் ,சர்ச்சையையும் உருவாக்கியது .  இயக்குனர் பாரதிராஜா உட்பட பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . முதல் பாகத்தின் இயக்குநரான சந்தோஷ் ஜெயகுமார் ,டேனியல் ,நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தினை தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .

நேற்றைய தினம் இந்த படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .  இந்த நிலையில் தற்போது இரண்டாம் குத்து படத்திலிருந்து 3 நிமிட ஸ்னீக் வீடியோவை வெளியிட்டுள்ளனர் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்