எஸ். பி. பி-யின்  உடல்நிலை குறித்து மகன் வெளியிட்ட வீடியோ.!

Default Image

எஸ். பி. பி-யின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக அவரது மகன் எஸ். பி. சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார்.

கடந்த 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை சூளைமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பாடகரான எஸ். பி. பாலசுப்பிரமணியம். அதனையடுத்து கடந்த 15ம் தேதி உடல்நிலை மோசமடைய தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் . அதனையடுத்து அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும், பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

எஸ். பி. பாலசுப்பிரமணியனின் உடல்நிலை குறித்து அ‌வ்வ‌ப்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வருவதோடு , அவரது மகனான எஸ். பி. சரணும் வீடியோ மூலம் அவரது உடல்நலம் குறித்து தெரிவித்து வருகிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும், அவர் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது அப்பாவின் மீது அன்பு காண்பித்தவர்களுக்கும், அவர் விரைவில் மீண்டு வர பிரார்த்தனை செய்து வருபவர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். விரைவில் அவர் மீண்டு வருவார் என்றும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

#Spb heathupdate 17/8/2020

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்