மிரட்டலான பவானியாக மாறிய ரோபோ சங்கர்.. வைரலாகும் வீடியோ..!
நடிகர் ரோபோ சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பொளக்கட்டும் பற பற பாடலுக்கு பவானி போல் நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு பவானி என்று குறிப்பிட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் நடிகர் அர்ஜுன் தாஸ், மகேந்திரன், நடிகை ஆண்ட்ரியா, கௌரி கிஷன் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். வெளியான 41 வது நாளாக மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த படத்தில் வில்லனாக பவானி கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து அசத்தி இருப்பார். தனது அசுரத்தனமான வில்லன் நடிப்பால் மக்களை கவர்ந்த விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக நடிகர் சிரஞ்சீவியும் அவரை புகழ்ந்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் தனது ட்வீட்டர் பக்கத்தில் பொளக்கட்டும் பற பற பாடலுக்கு பவானி போல் நடந்து வரும் வீடியோவை வெளியிட்டு பவானி என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Bhavani ???? pic.twitter.com/ylVcP6UODO
— Robo Sankar (@imroboshankar) February 20, 2021