இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது பெண்ணிடம் காதலை வெளிப்படுத்திய இந்திய ரசிகர்!வைரலாகும் வீடியோ!
உலகக்கோப்பையில் 22-வது லீக் போட்டியில் இந்திய அணியும் ,பாகிஸ்தான் அணியும் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச முதலில் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 337 ரன்கள் சேர்த்தனர்.
மழைகாரணமாக 40 ஓவராக குறைக்கப்பட்டது அதனால் 302 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 212 ரன்கள் எடுத்து 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் இரு நாட்டு ஏராளமான ரசிகர்கள் குவித்து இருந்தனர். அதில் இந்திய அணி ஜெர்சி அணிந்த இளைஞர் ஒருவர் அங்கு இருந்த பெண் ஒருவரிடம் தனது காதலை வெளிப்படுத்தினர்.அப்பெண்ணுக்கு அந்த இளைஞர் மோதிரத்தை பரிசாக வழங்கினார்.
அதை ஏற்று கொண்ட அந்த பெண் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன் இருவரும் கட்டி பிடித்து ,முத்தம் கொடுத்து தங்களது அன்பை வெளிப்படுத்தினர்.மேலும் இந்த நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்த ரசிகர்கள் சத்தமிட்டு அந்த காதல் ஜோடியை உற்சாகப்படுத்தினர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
So this happened #INDvPAK #INDvsPAK #CricketWorldCup #Proposal pic.twitter.com/8lg8AcJvKv
— Anvita (@BebuJ) June 21, 2019